கருவாட்டு குழம்பு | Dry Fish Kuzhambu

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு -2 கைப்பிடி
வாழைக்காய்- 1
மாங்காய்- 1
நீர் -3 கப்
வரமிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
சின்ன வெங்காயம்- 10
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
உப்பு- தேவைக்கு


தாளிக்க‌:

கடுகு- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 5
கறிவேப்பிலை- 1 கொத்து
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வாழைக்காயினை தோல் சீவவும்.மாங்காய் மற்றும் வாழைக்காயினை அவியலுக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

*தேங்காயினை மைய அரைத்து வைக்கவும்.

*கருவாட்டினை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.

*மண்சட்டியில் நீர், உப்பு, மஞ்சள்தூள், வரமிளகாய்த்தூள், இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் எண்ணெய், நறுக்கிய சின்ன வெங்காயம், சுத்தம் செய்த கருவாடு மற்றும் நறுக்கிய வாழைக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*நன்றாக கொதித்ததும் மாங்காய் மற்றும் தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்கு கொதிக்க வைக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் மீதமிருக்கும் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

Related Videos