மினி ஊத்தாப்பம்
தேவையான பொருட்கள்:
இட்லிமாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
இட்லிபொடி - தேவைக்கு
எண்ணெய் அல்லது நெய் - சுடுவதற்கு
செய்முறை விளக்கம்:
*தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
*மாவை தோசைக்கு தேய்ப்பது போல் மெலிதாக தேய்க்ககூடாது.மாவு தானாகவே பரவிக்கொள்ளும்.
*அதன்மேல் நறுக்கிய வெங்காயம் அல்லது இட்லி பொடி அல்லது கொத்தமல்லித்தழை தூவிவிடவும்.
*சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மறுபுறம் திருப்பி போடவும்.
*குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.
பின் குறிப்பு:
*அதிக தீயில் வேகவைத்தால் ஊத்தாப்பம் நடுவில் வேகாமல் மாவாக இருக்கும்.
*இட்லிக்கு ஊற்றுவதுப்போல் மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.
*இதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி அல்லது கேரட் துறுவல் அல்லது துறுவிய கோஸ் சேர்க்கலாம்.