மட்டன் வறுவல் | mutton varuval
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 20
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*மிளகாயை 2ஆக கிள்ளி விதை நீக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வெங்காய்ம் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
*பின் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் கறி சேர்த்து வதக்கி தேவையான நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும்,கறியை நீர் சுண்டும் வரை வதக்கி பரிமாறவும்