இறால் வடை | PrawnVadai

தேவையான பொருட்கள்:

குட்டி இறால் - 100 கிராம்
கடலைப்பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை விளக்கம்:

*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து சோம்பு மற்றும் பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

*இறாலை சுத்தம் செய்து மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வெறும் கடாயில் வதக்கிக்கொள்ளவும்.

*அரைத்த கடலைப்பருப்பில் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறி.கொத்தமல்லி மற்றும் 
வதக்கிய இறால் அனைத்தையும் ஒன்றாக கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Related Videos