இறால் ஊறுகாய் | Prawn Pickle

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் -1 1/2குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து பொடிக்க:

கடுகு - 1/2டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*வறுத்து பொடிக்க குடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் இறாலை சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தனியாக வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் உற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கி,மிளகாய்த்தூளை சேர்க்கவும்.

*உடனே வருத்த பொடி, உப்பு, வினிகர் மற்றும் இறால் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

*மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும்.
*ஆறியபின் உபயோகப்படுத்தவும்.

*1 வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

கவனிக்க:
*இறாலை எண்ணெயில் வதக்கும் போது நீர் விடும்.அது சுண்டும் வரை கிளறி இறக்கவும்.தண்ணீர் சேர்த்து வதக்ககூடாது.

Related Videos