மட்டன் புலாவ் | Mutton pulao
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
மட்டன் - 1/4 கிலோ
தயிர் - 125 கிராம்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெங்காயம் - 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பட்டை - சிறுதுண்டு
பிரியாணி இலை - 2
கிராம்பு,ஏலக்காய் - தலா 2
செய்முறை விளக்கம்:
*மட்டனை சுத்தம் செய்து தயிர், கரம் மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
*வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.சிறிது வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*அரிசியை கழுவி 20நிமிடம் ஊறவைத்து நீரைவடிக்கவும்.
*குக்கரில் சிறிது நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி எடுக்கவும்.பின் மீதமுள்ள நெய், எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் உப்பு, மஞ்சள்தூள், வேகவைத்த கறி, புதினா, வறுத்த அரிசி, தேங்காய்ப்பால் மற்றும் கறிவேகவைத்த நீர் 2 கப் சேர்க்கவும்.
*வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.பரிமாறும் போது வறுத்த வெங்காயத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.