இறால் ஒட்ஸ் ப்ரை | Prawns oats Fry

தே.பொருட்கள்:

பெரிய இறால் - 25
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
முட்டை - 1
ஒட்ஸ் - 1/4 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 

செய்முறை விளக்கம்:

*இறாலின் தோலை முழுவதும் உரிக்காமல் வால்பகுதியை மட்டும் உரிக்காமல் விடவும்.

*சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். முட்டையை நன்கு கலக்கிக் கொள்ளவும்.

*பின் ஒவ்வொரு இறாலையும் முட்டையில் நனைத்து பின் ஒட்ஸில் பிரட்டி ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Related Videos