இறால் பிரியாணி | Prawn Biryani
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த இறால் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 2 பெரியது
அரிந்த தக்காளி - 2 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 20
தயிர் - 125 கிராம்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - தலா 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை விளக்கம்:
*இறாலில் சிறிது உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஊறவைக்கவும்.அரிசியை கழுவவும்.
*குக்கரில் சிறிது நெய் விட்டு சிறிது வெங்காயம், 2 கீறிய பச்சை மிளகாய் மற்றும் அரிசி சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.
*மீதமிருக்கும் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள், புதினா கொத்தமல்லி மற்றும் இறால் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கிய பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கிய அரிசி+6 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வைத்து எடுக்கவும்.
* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
பின் குறிப்பு :
*அவரவர் காரத்திற்கேற்ப பச்சை மிளகாயை சேர்க்கவும்.