பூண்டு சட்னி | Garlic Chutney
தேவையான பொருட்கள்:
பூண்டுப்பல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 10 - 15
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*காய்ந்த மிளகாய், உப்பு, புளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைக்கவும்.
*பின்பு பூண்டுப்பல் சேர்த்து மைய அரைத்து நல்லெண்ணெய் கலக்கவும்.
*சுடான இட்லியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
பின் குறிப்பு:
*புளியும் எண்ணெயும் அவரவர் சுவைக்கு தகுந்தபடி சேர்க்கவும்.தண்ணீர் விட்டு அரைக்ககூடாது.அதற்க்கு பதிலாக எண்ணெய் விட்டு அரைக்கவும்.