வடை கறி
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,புதினா,கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 2
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.கடலைப்பருப்பை 3/4 மணிநேரம் ஊறவைத்து சோம்பு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*கடலைப்பருப்புடன் அரிந்து வைத்துள்ள சிறிது வெங்காயம்+அரைத்த சிறிதளவு மசாலா விழுது சேர்த்து பிசைந்து பகோடாகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம், அரைத்த மசாலா விழுது, தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவும்.
*வதங்கியதும் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்ததும் பொரித்த பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.