மீன் பகோடா | FishPakoda

தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது
வெங்காயம் -1
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை விளக்கம்:

*வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் மீன், உப்பு, மாவு வகைகள், மிளகாய்த்தூள், முட்டை, சோம்புத்தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை மற்றும் பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாக பகோடா பதத்திற்க்கு பிசையவும்

*கையில் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் பொலபொலனு இருக்கனும்.

*கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை பகோடாவாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Related Videos