இட்லி பொடி

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 1/2 கப்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

காய்ந்த மிளகாய் - 5

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 சிறிய கட்டி

உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*மேற்கூறிய அனைத்து பொருட்களில் உப்பு மற்றும் பெருங்காயத்தை தவிர அனைத்தையும் லேசாக வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுக்கவும்.

*பெருங்காயத்தை மட்டும் என்ணெயில் பொரித்து அதனுடன் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

*கடைசியாக எடுக்கும் போது சிறுதுண்டு வெல்லம் சேர்த்து அரைத்தால் நன்றாகயிருக்கும்.ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தவும்.

 

Related Videos