சிம்பிள் வெஜ் குருமா | Simple veg kurma
தேவையான பொருட்கள்:
காய் கலவை - 2 கப் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி மற்றும் உருளை
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வறுத்து அரைக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -4 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -3
இஞ்சி - 1சிறுதுண்டு
வெந்தயம் + கசகசா - தலா 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு - 2
முந்திரி -5
பட்டை -சிறுதுண்டு
செய்முறை விளக்கம்:
*வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயில் வருத்து நைசாக அரைக்கவும்.
*காய்களை குக்கரில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு 2 அல்லது 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் அரைத்த விழுதினை சேர்த்து 5 அல்லது 7 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
*சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.
பின் குறிப்பு:
*நானும் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது.போட்டோ எடுப்பதற்குள் குருமா காலியாகிடுச்சு.