தூனாமீன்(Thon) பொடிமாஸ் | Thon Podimas
தேவையான பொருட்கள்:
தூனாமீன் - 1 டின்
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டுப்பல் மற்றும் கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.
*டின்னை உடைத்து மீனை தண்ணிலிருந்து நன்கு பிழிந்து வைக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகுத்தூள், சோம்புத்தூள், மீன் மற்றும் உப்பு அனைத்தையும் போட்டு நன்கு கிளறவும்.
*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
கவனிக்க:
*டின் மீனில் உப்பு இருப்பதால் உப்பு பார்த்துப் போடவும்.