இடியாப்பம் &தேங்காய்ப்பால் | Idiyappam and Coconut Milk

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு - 1 கப்

கொதிநீர் - 1 1/2 கப்

உப்பு - தேவைக்கு

தேங்காய் பால் செய்ய

தேங்காய்த்துறுவல் - 1 கப்

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

சர்க்கரை - இனிப்பிற்கேற்ப

செய்முறை விளக்கம்:

*இடியாப்ப மாவில் உப்பு கலந்து கொதி நீர் சேர்த்து கரண்டியால் கெட்டியாக கிளறவும்.

*இடியாப்ப அச்சில் மாவை பிழிந்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.

*தேங்காய்த்துறுவலில் ஏலக்காய்த்தூள் மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும்.

*அதனுடன்  சர்க்கரை கலந்து இடியாப்பத்துடன் பரிமாறவும்.

 பின் குறிப்பு:

*இடியாப்ப மாவு பிசையும் போது தண்ணீர் நன்கு கொதித்திருந்தால் தான் மாவு பிழிய வரும்.

 

Related Videos