புளி இஞ்சி | Puli Inji

தேவையான பொருட்கள்: 

பொடியாக நறுக்கிய இஞ்சி -1/4 கப்

புளி -பெரிய எலுமிச்சை பழ அளவு

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

வெல்லம் -சுவைக்கு

உப்பு- தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய் -4 டீஸ்பூன்

கடுகு -1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 1

கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை விளக்கம்:

*புளியை 1/2 கப் நீர் அளவுக்கு கரைக்கவும்.

*2 டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சியை நன்கு வறுத்து தனியாக வைக்கவும்.

*பாத்திரத்தில் புளிகரைசல், 1/2 கப் நீர்உப்புமஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள்  சேர்த்து கொதிக்கவிடவும்.

*புளிகரைசல் நன்றாக கொதித்து கெட்டியாக வரும் போது வறுத்த இஞ்சி மற்றும் வெல்லம் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*கெட்டியாக வரும் போது மீதமுள்ள எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

 

 

Related Videos