தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி | Thalappakattu Mutton Biryani
திண்டுக்கல் என்றாலே பூட்டு ஞாபகம் வருவது போல பிரியாணியும் புகழ் பெற்றது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சிறிது தூரத்தில் வேணு பிரியாணி ஹோட்டல் இருக்கு.திண்டுக்கல் போனால் யாரும் மிஸ்பண்ணிடாதீங்க அந்த ஹோட்டலில் பிரியானி சாப்பிட....சிறிய ஹோட்டல்தான் என்றாலும் அங்கு பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும்.
விதவிதமா பிரியாணி சமைப்பது ரொம்ப பிடிக்கும்.ஒருமுறை டி.வியில் பார்த்து செய்த குறிப்பு இது...
இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்:
*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.
*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.
*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.
*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.
நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.
தேவையான பொருட்கள்:
மட்டன் 1/2 கிலோ
அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டுப்பல் - 6
நெய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
பச்சை மிளகாய் - 10
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க
கசகசா - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
பட்டை - சிறுதுண்டு
பிரியானி இலை -3
கிராம்பு - 5
செய்முறை விளக்கம்:
*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*கறியை சிறிது உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து தண்ணிரை அளந்து வைக்கவும்.
*வெங்காயம்+தக்காளி அரியவும்.பச்சை மிளகாயை கிறவும்.இஞ்சி பூண்டை அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.இல்லையெனில் அடி பிடிக்கும்.
*பின் கறிவேக வைத்த நீரை அளந்து அதற்க்கு தேவையானளவு நீர் 2ம் 3 கப் வருமாறு அளந்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*கொதிவந்ததும் அரிசி மற்றும் உப்பு சேர்க்கவும்.தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால் மற்றும் வேகவைத்த கறி சேர்க்கவும்.
*நீர் சுண்டி வரும் போது புதினா கொத்தமல்லி+நெய் சேர்த்து தம்மில் 15 நிமிடம் போடவும். அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
*சுவையான பிரியாணி ரெடி!!