சோயா மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 30
மைதா மாவு - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.
*அதனுடன் உப்பு+மைதா மாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+புட் கலர் மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தும் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல் மற்றும் குடமிளகாய் சேர்த்து வதக்கி பொரித்த சோயா உருண்டைகள்மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.