சுறா புட்டு | SharkFish Puttu

தேவையான பொருட்கள்:

சுறாமீன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1 பெரியது

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லித்தழை -சிறிது

மஞ்சள்தூள் - 1சிட்டிகை

மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்

சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பூண்டுப்பல் -5

இஞ்சி - சிறுத்துண்டு

 தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும்.

*வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் )

*பின் உப்புமிளகுத்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும்.

*வெங்காயம்பச்சைமிளகாய்பூண்டுப்பல்கொத்தமல்லித்தழை மற்றும் இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து இஞ்சிபூண்டுவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மீனைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பின் குறிப்பு:

*விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.

Related Videos