பிரண்டை துவையல் | Pirandai Thuvaiyal

தேவையான பொருட்கள்: 

பிரண்டை -1 கற்று

இஞ்சி- 2 டேபிள்ஸ்பூன்

பூண்டுப்பல் -1/4 கப்

புளி -சிறிய எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய்- 8

உப்பு- தேவைக்கு

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பிரண்டையை கழுவி ,நடு கணுவை நீக்கி நறுக்கி நார் நீக்கவும்.

*இதனை நறுக்கும் போது கையில் அரிப்பு ஏற்படும்,கையில் எண்ணெய் தடவி நறுக்கினால் அரிக்காது.

*பின் பிரண்டையை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் என தனிதனியாக வறுத்து எடுக்கவும்.

*கடைசியாக நறுக்கிய பிரண்டையை சேர்த்து நன்கு வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் ஒன்றாக புளி மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

*சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பின் குறிப்பு:

*பிரண்டையை நன்கு வதக்கவில்லை எனில் சாப்பிடும் போது அரிப்பு எடுக்கும்.

*உளுத்தம் பருப்பு சேர்க்காமல் அரைத்ததில் துவையல் மிகவும் சுவையாக இருந்தது.

Related Videos