மீன் பிரியாணி | Fish Biryani
தேவையான பொருட்கள்:
பாகம் - 1
மீன் துண்டுகள் -1/2 கிலோ
முட்டை -2
எலுமிச்சை சாரு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மிளகு,சீரகத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
பாகம் - 2
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 10
கேரட் - 1
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 கைப்பிடி
பால் ,தயிர் - தலா 1 கப்
எலுமிச்சைபழம் - 1
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லிதழை - 1 கட்டு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பட்டை -1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -2
செய்முறை விளக்கம்:
*மீனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுசீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
*பின் எண்ணெய் விட்டு 2 பக்கமும் உடையாமல் முறுகலாக பொரித்தெடுக்கவும்.
*முட்டை, கடலைமாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.
*வேறொரு கடாயில் பொரித்த மீன் துண்டுகளை முட்டை கலவையில் நன்கு நனைத்து 2 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.மீதமுள்ள முட்டை கலவையை மீனிலேயே ஊற்றி பொரித்தெடுக்கவும்.
*இப்பொழுது பிரியாணிக்கான மீன் ரெடி!!
*வெங்காயத்தை நீளவாக்கிலும்,பச்சை மிளகாயை கீறியும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.தேங்காய் துறுவலை நன்கு மைய அரைக்கவும்.கேரட்டில் பாதியை நறுக்கியும்,மீதியை துருவியும் வைக்கவும்.
*புதினா,கொத்தமல்லியை நறுக்கவும்.நறுக்கிய வெங்காயத்தில் பாதியும்,கொத்தமல்லியில் பாதியும் எண்ணெயில் பொன்முறுவலாக பொரித்தெடுக்கவும்.எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுக்கவும்.
*அரிசியை 1/2 மணிநேரம் , 1 கப் பால் மற்றும் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, நறுக்கிய,துருவிய கேரட் மற்றும் தக்காளி என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கிய பின் அரைத்த தேங்காய், உப்பு, தயிர் மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
*அனைத்தும் நன்கு சேர்ந்தாற்போல் வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 கோப்பை அளவு குருமாவை தனியாக எடுத்து வைக்கவும்.
*மீதியுள்ள குருமாவில் அரிசியில் ஊறவைத்த பால்மற்றும் தண்ணீரை சேர்த்து ஊற்றி நன்கு கலக்கி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
*குருமா கொதிவரும் போது அரிசியை போட்டு வேகவிடவும்.
*தண்ணீர் நன்கு வற்றி அரிசி 3/4 பதமாக வெந்து வரும் போது பாதி அரிசியை எடுத்து தனியாக வைக்கவும்.
*மீதி சாதத்தில் பொரித்த மீன் துண்டுகள் மற்றும் தனியாக எடுத்துவைத்த குருமா மற்றும் பொரித்த வெங்காய மல்லித்தழை தூவி விடவும்.
*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை மற்றும் நெய் ஊற்றி விடவும்.
*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை மற்றும் நெய் ஊற்றி விடவும்.
*190°C டிகிரிக்கு அவனை முற்சூடு செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
*பரிமாறும் போது சாதம் மற்றும் மீனை உடையாமல் கிளறி எடுத்து பரிமாறவும்.
பின் குறிப்பு:
*நான் பயன்படுத்தியிருப்பது வஞ்சீர மீன்.மீனை 2 முறை பொரிப்பதால் உடையாமல் இருக்கும்.
*இதற்க்கு அதிகம் முட்கள் இல்லாத மீனைதான் பயன்படுத்த வேண்டும்.வஞ்சீரம்மீன் (நெய் மீன்/அருக்குலா மீன்),கொடுவா மீன்,கடல் சால்மன் மீன்,காக்கை மீன்,விலை மீன்,பெரிய தேங்காய் பாரை மீன் இவற்றை பயன்படுத்தலாம்.
*கேரட் சேர்ப்பதால் பிரியாணி சுவையாகவும்,கலராகவும் இருக்கும்.