காலிபிளவர் மஞ்சூரியன் (டிரை)
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் - 1 நடுத்தர அளவு
மைதா - 1/2 கப்
சோளமாவு - 1/8 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க+1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ்- 1/2 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1
செய்முறை விளக்கம்:
*காலிபிளவரை சிறுப்பூக்களாக பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.
*மைதா, சோளமாவு, மிளகுத்தூள் மற்றும் உப்பு இவற்றை ஒன்றாக கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூக்களை நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டுப்பல், வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளைப் பகுதி இவற்றை சேர்த்து வதக்கவும்.
*பின் பசை மிளகாய்+தக்காளி சாஸ்+தக்காளி கெட்சப்+சோயா சாஸ்+வினிகர்+1 டீஸ்பூன் சோளமாவு+சர்க்கரைமற்றும் உப்பு என இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.
*பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.
பின் குறிப்பு:
*காலிபிளவரை பொரிக்கும் போது பொன்னிறமாக பொரித்தால் தான் நீண்ட நேரம்வரை மொறுமொறுப்பாக இருக்கும்.
*பச்சை மிளகாய் பதில் 1 டீஸ்பூன் பூண்டு சில்லி சாஸ் சேர்க்கலாம்.