மத்தி மீன் குழம்பு(கேரளா ஸ்டைல்) | Mathi Meen Kuzhambu ( Kerala Style)
கேரளாவில் குழம்பிற்கு கொடாம்புளி சேர்ப்பார்கள்,இல்லையெனில் சாதரண புளியே சேர்க்கலாம்.
சிறிய மத்தி மீனில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிறிய மத்தி மீன்- 10
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
பொடியாக நறுக்கிய தக்காளி- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டு- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -3/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல்- 3/4 கப்
நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகள்- 6
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி என வரிசையில் சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் தூள் வகைகள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்த பின் மீன் மற்றும் மாங்காய்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
*கடைசியாக தேங்காய்ப்பாலை ஊற்றி 2 நிமிடங்கள் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*மீன் போட்ட பிறகு கரண்டியால் கிளற வேண்டாம்.