அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு | Arachuvitta Chicken Kuzhambu
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை -2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெயில் வறுத்தரைக்க:
தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் பொடித்து பின் நீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
*சிக்கனில் தயிர் மற்றும் 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், மீதமிருக்கும் இஞ்சிபூண்டு விழுது, தக்காளி மற்றும் கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த மசாலா விழுதினை போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
*பின் சிக்கனை போட்டு வதக்கி உப்பு மற்றும் மஞ்சள்தூள் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதிக்கும் போது தோல்சீவி துண்டுகளாகிய உருளைக்கிழங்கைப்போடவும்.
*குழம்பு நன்கு கொதித்து சிக்கனும் உருளையும் நன்கு வெந்ததும் இறக்கவும்.
*கமகமக்கும் சிக்கன் குழம்பு ரெடி.