சிக்கன் இஞ்சி குழம்பு | Chicken Ginger Kuzhambu

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 1 பெரியது

பச்சை மிளகாய் - 10

பூண்டுப்பல் - 10

இஞ்சி - 2 அங்குலத்துண்டு

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

கெட்டி தேங்காய்ப்பால் - 1கப்

புதினா - சிறிது

எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

 தாளிக்க:

பிரியாணி இலை - 2

கிராம்பு - 3

பட்டை - 1 துண்டு

 செய்முறை விளக்கம்:

*சிக்கனை சுத்தம் செய்யவும்.இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

 *வெங்காயம் மற்றும் தக்காளி நீளவாக்கில் அரியவும்.

 *பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிளகாய் விழுது மற்றும் தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

 *வதங்கியதும் சிக்கன்உப்புமஞ்சள்தூள் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

 *சிக்கன் வெந்ததும் புதினா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

 பி.கு:
* இதே போல் மட்டனிலும் செய்யலாம்.

 * இந்த குழம்பிற்க்கு பூண்டை விட இஞ்சி அதிகமாக போடனும்.காரம் வேண்டுபவர்களுக்கு பச்சை மிளகாயை அதிகமாக போடவும்.

Related Videos