கொத்தமல்லி புலாவ் | Coriander Pulao
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
ஊற வைத்த சென்னா - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
கொத்தமல்லி - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3
செய்முறை விளக்கம்:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.
* குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சோம்பு, கிராம்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
*வதங்கியதும் அரிசி, தேங்காய்ப்பால், சென்னா, உப்பு மற்றும் 2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.