சிக்கன் மசாலா ப்ரை | Chicken Masala Fry
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவையான அளவு
எண்ணெயில் வறுத்தரைக்க:
தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - சிறு துண்டு
செய்முறை விளக்கம்:
*சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.
*வறுக்க குடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
*வெங்காயம்+தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மசாலா மற்றும் புதினா ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*சிக்கன் தண்ணீர் விடும்,தண்ணீர் சுண்டும் வரை நன்கு பொன்முறுவலாக சேர்த்து கிளறி இறக்கவும்.