வெஜ் குருமா | Veg Kurma

தேவையான பொருட்கள்:

விருப்பமான காய்கறிகள் - 2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1

நறுக்கிய தக்காளி - 1

தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

தேங்காய் - 1/2 மூடி

பிரியாணி இலை - 3

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

இஞ்சி - 1 சிறுதுண்டு

பூண்டுப்பல் -4

பச்சை மிளகாய் - 3

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் -2

செய்முறை விளக்கம்:

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தேங்காயை துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.

*1ஆம் பால் 1 கப் அளவிலும்,2ஆம் பால் 1 1/2 கப ளவிலும் எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையை போட்டு தாளித்து வெங்காயம்அரைத்த மசாலாதக்காளிதனியாத்தூள்உப்பு மற்றும் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியதும் 2ஆம் பாலை ஊற்றி காய்களை வேகவிடவும்.காய்கள் நன்கு வெந்ததும் 1ஆம் பாலை ஊற்றி இறக்கவும்.

பின் குறிப்பு:

நான் சேர்த்திருக்கும் காய்கள் கேரட்பீன்ஸ்பட்டாணி மற்றும் உருளைகிழங்கு.

Related Videos