சிக்கன் மலாய் கபாப் | Chicken Malai Kabab
தேவையான பொருட்கள்:
மூங்கில் குச்சிகள் -4 (தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.)
பாகம் -1
எலும்பில்லாத சிக்கன் - 15 துண்டுகள்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பாகம் -2
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
ப்ரெஷ் கீரீம் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*பாகம் -1 ல் கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் பாகம் -2 கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து ஊறவைத்த சிக்கனில் கலந்து மீண்டும் 1 மணிநேரம் ஊறக்கவும்.
*மூங்கில் குச்சியில் சொருகி அவனில் 210°C டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பரிமாறும் போது சாட் மசாலா தூவி பரிமாறவும்.
பின் குறிப்பு :
இளம் கோழியாக இருந்தால் Meat Tenderiser தேவையில்லை.