கொள்ளு ரசம் | Kollu Rasam

தேவையான பொருட்கள்:

கொள்ளு வேகவைத்த நீர் - 3 கப்

சின்ன வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1 பொடியாக நறுக்கியது

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

புளிகரைசல் - 1/4 கப்

கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு

நசுக்கிய பூண்டுப்பல் - 3

கடுகு - 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்

தனியா - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் -4

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம்பூண்டுகறிவேப்பிலைகீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் புளிகரைசல்ரசப்பொடிமஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பின் கொள்ளு வேகவைத்த நீரை சேர்த்து கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*இதை சூப்பாகவும் குடிக்கலாம்.இந்த முறையில் செய்ததில் சூப்பர்ர் ருசியில் இருந்தது.

 

Related Videos