முள்ளங்கி சாம்பார் | Mullangi Sambar

*முள்ளங்கியினை மட்டும் எப்போழுதும் மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்காமல் தனியாக சமைக்க வேண்டும்.

*முள்ளங்கியை சாம்பார் அல்லது குழம்பு செய்யும் போது எப்போழுதும் எண்ணெயில் வதக்கி சமைக்கவேண்டும்.இல்லையெனில் முள்ளங்கியின் பச்சை வாசனை அடிக்கும்.

*அதே போல் எப்பொழுதும் இதற்கு புளியின் அளவை குறைவாக சேர்க்கவேண்டும்.

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1/3 கப்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

முள்ளங்கி -1 நடுத்தர  அளவு

நறுக்கிய வெங்காயம் -1

நறுக்கிய தக்காளி -1 சிறியது

கீறிய பச்சை மிளகாய் -2

சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்

புளிகரைசல் -1/4 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு+எண்ணெய் = தாளிக்க

தாளிக்க:

வடகம் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.முள்ளங்கியை தோல்சீவி வட்டமாக மெலிதாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்பச்சை மிளகாய்தக்காளி மற்றும் நறுக்கிய முள்ளங்கி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய் வெந்ததும் சாம்பார் பொடி மற்றும் புளிகரைசல் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பின் குறிப்பு:

*சிகப்பு முள்ளங்கியாக இருந்தால் தோலுடன் சமைக்கலாம்,ஆனால் அந்த சாம்பார் வெள்ளை முள்ளங்கி சாம்பார் போல சுவையாக இருக்காது.

 

Related Videos