காளான் மசாலா | Mushroo Masala
தேவையான பொருட்கள்:
காளான் - 500கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*காளானை வெதுப்வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு விட்டு 10 நிமிடம் வைத்து,கழுவி கட் செய்யவும்.
*வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூளை போட்டு லேசாக வதக்கி காளான் மற்றும் உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.
*தண்ணீர் ஊற்றவேண்டாம்,காளான் நீர் விடும்.
*நீர் சுண்டும் வரை கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
ரொட்டி,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.விருப்பப்பட்டால் இதனுடன் குடமிளகாயும் சேர்க்கலாம் வாசனையாக இருக்கும்.