பலாக்கொட்டை பொடிமாஸ் | Jackfruit Seeds Podimas
தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு இவற்றை ஒன்றும் பாதியுமாக நசுக்கிக் கொள்ளவும்.
*பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்து 2ஆகா நறுக்கி உப்பு சேர்த்து நீரில் வேகவைத்து வெந்ததும் நீரை வடிக்கவும்.
*ஆறியதும் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும் அல்லது விப்பர் மோடில் ஒன்றிரண்டாக சுற்றி எடுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நசுக்கிய இஞ்சி பூண்டினை சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த பலாக்கொட்டையை சேர்த்து 5நிமிடங்கள் கிளறவும்.
*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.