பாதாம் புதினா சிக்கன் | Badam Pudina Chicken

நாண் ,நெய் சாதம்,புலாவ் ,சப்பாத்தி இவற்றிற்கு நன்றாக இருக்கும்...

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 5

பாதாம் -20

தயிர் -1/2 கப்

நெய் - 5 டேபிள்ஸ்பூன்

கெட்டி தேங்காய்ப் பால் -  1 கப்

புதினா - 1 கைப்பிடி

உப்பு - தேவைக்கு

 அரைக்க:

இஞ்சி - சிறு துண்டு

பூண்டுப்பல் - 10

ஏலக்காய் - 3

பட்டை - சிறிது

காய்ந்த மிளகாய் - 6

மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*சிக்கனை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் தயிரில் ஊறவைக்கவும்.

 *அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து,தோலுரித்து விழுதாக அரைக்கவும்.

 *ஊறவைத்த சிக்கனை குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

 *கடாயில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

 *நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

 *பின் வேகவைத்த சிக்கன்பாதாம் விழுது மற்றும் உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

 *5 நிமிடம் கழித்து புதினாவை தூவி இறக்கவும்.

Related Videos