தக்காளித் தொக்கு | Tomato Thokku
தேவையான பொருட்கள்:
தக்காளி - 6 பெரியது
உப்பு - தேவைக்கு
புளி - 1 சின்ன உருண்டை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
செய்முறை விளக்கம்:
* தக்காளியை 4ஆக அரிந்து ஒரு பாத்திரத்தில் உப்பை கரிக்கும் அளவிற்க்கு போடவும்.
*அதனுடன் புளியை கொட்டையில்லாமல் தக்காளியின் நடுவில் அமுங்குவது போல் போடவும்.
*மறுநாள் காலையில் மூடியை திறந்தால் ஒரு வாசனை வரும்,அதனால் பரவாயில்லை.தக்காளியை மட்டும் தனியாக எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் காயவைக்கவும்.
*2 நாள் காய்ந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
*வெரும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மிளகாய்த்தூளைப்போடவும்।
*உடனே அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு கிளறவும்.
*நன்கு சுருண்டு வரும் போது வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.
பின் குறிப்பு:
*விருப்பப்பட்டால் சிறுதுண்டு வெல்லம் சேர்க்கலாம்.
*இட்லி,தோசை,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.