கூட்டு கறி | Kootu Curry

தேவையான பொருட்கள்: 

சேனைக்கிழங்கு துண்டுகள் -1 கப்

துண்டுகளாகிய வாழைக்காய்- 1 கப்

கறுப்புக் கடலை -1/2 கப்

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

வெல்லம் -1டேபிள்ஸ்பூன்

உப்பு -தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் -3/4 கப்

மிளகு- 1 டீஸ்பூன்

சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

தே.எண்ணெய்- 1டீஸ்பூன்

கடுகு- 1/4 டீஸ்பூன்

பொடித்த மிளகு- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

காய்ந்த மிளகாய்- 2

தேங்காய்த்துறுவல்- 1/2 கப்

நெய்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

 *பாத்திரத்தில் நீர்+சிறிது மஞ்சள்தூள் சேர்த்து சேனைகிழங்கினை 1/2 வேக்காடு வேகவைத்து நீரை வடிக்கவும்.இப்படி   செய்வது கிழங்கின் காரலை போக்கும்.

*மீண்டும் பாத்திரத்தில் நீர்சேனைக்கிழ்னக்குவாழைக்காய்மஞ்சள்தூள்மிளகாய்த்தூள்உப்புகறிவேப்பிலை மற்றும் வெல்லம் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் வேகவைத்த கடலை மற்றும்  அரைத்த விழுதினை சேர்த்து மேலும் பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.

*இது சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

 *கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகுகாய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தேங்காயை சேர்த்து பொன் முறுவலாக வறுத்து சேர்க்கவும்.

*கடைசியாக நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.


 

Related Videos