மென்மையான குலோப் ஜாமுன் செய்வது எப்படி.........
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1 கப்
மைதா -1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
வெண்ணைய் -2 டேபிள்ஸ்பூன் (அறைவெப்பநிலையில்)
குளிர்ந்த பால் - தேவைக்கு
சர்க்கரை - 1 1/2 கப்
நீர் - 1 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
எண்ணெய் -பொரிக்க
காரமான மல்டிக்ரெயின் சுண்டல் செய்முறை??
மென்மையான குலோப் ஜாமுன் செய்முறை:
* பால் பவுடர் மற்றும் மைதா மற்றும் சோடா உப்பு மூன்றையும் நன்றாக சலித்து வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
*பின்பு தேவையான பால் சேர்த்து மிருதுவாக பிசையவும்.மாவு கைகளில் ஒட்டும் பதத்தில் இருக்கும். 5 நிமிடம் வைத்திருந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
*பாத்திரத்தில் சர்க்கரைமற்றும் நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த்தூள்மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
*எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் 3 - 4 மணிநேரங்கள் ஊறவைத்து பரிமாறவும்.
*இதனை ஐஸ்க்ரீம் அல்லது அல்வாவுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
பின் குறிப்பு:
* உருண்டையை உருட்டும் போது வெடிப்புகள் இல்லாமல் உருட்டவும் இல்லையெனில் சர்க்கரை பாகில் ஊறியதும் உதிர்ந்துவிடும்.அப்படி உருட்டும் போது வெடிப்பு வந்தால் மாவினை மேலும் சிறிது பால் தெளித்து பிசையவும்.
*எண்ணெய் அதிகம் காயவைத்து பொரித்தால் ஜாமூன் மேலே பொன்னிறமாகவும்,உள்ளே வேகாமலும் இருக்கும்.மிதமான சூட்டில் பொரிக்கவும்.
*பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது போடவும்.சூடான பாகில் போட்டால் உருண்டை ஊறியதும் எடுக்கும் போது உடையும்.
*உருண்டைகளை சிறியதாக உருட்டவும்,பொரிக்கும் பொது 2 மடங்காகும்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Tasty & Yummy Gulab Jamun Receipe in Tamil | Gulab Jamun Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil