மேத்தி சிக்கன் | Methi Chicken
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெந்தயக்கீரை - 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 அரைத்துக் கொள்ளவும்
இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1 அரைத்துக் கொள்ளவும்
தயிர் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*வெங்காயத்தை எண்ணெயில் பிரவுன் கலரில் பொரித்து ஆறவைத்து தயிருடன் விழுதாக அரைக்கவும்.
*வெந்தயக்கீரையை உப்பு+சர்க்கரை கலந்த நீரில் 15 நிமிடம் வைத்து நன்கு அலசி வைக்கவும்.
*வெந்தயக்கீரையை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைக்கவும்.
*அதே கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.பின் சீரகப்பொடி மற்றும் எல்லா தூள் வகைகள் சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
*பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.
*வெந்த பின் பொரித்த வெந்தயக்கீரை, கரம் மசாலா மற்றும் தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கிரேவி பதத்திற்க்கு வரும் போது இறக்கவும்.
*சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்