நீர்மோர்
தேவையான பொருட்கள்:
தயிர் - 125 கிராம்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
இஞ்சித்துறுவல் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சைமிளகாய் - 1/2
உப்பு - தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*தயிருடன் 1 டம்ளர் நீர் விட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.இஞ்சி பச்சைமிளகாய் அரைக்கவும்.
*தயிருடன் உப்பு, எலுமிச்சை சாறு, அரைத்த இஞ்சி,பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை கலந்து பரிமாறவும்.
*விருப்பட்டால் இதனுடன் வெள்ளரி,கேரட்,மாங்காய் சேர்க்கலாம்.