கருவாடு தொக்கு | DryFish Thokku

இந்த தொக்கின் ஸ்பெஷாலிட்டி தக்காளி இல்லாமல் செய்வதும்,தேங்காயை நீர் சேர்க்காமல் அரைத்து செய்வதும் தான்.அதுபோல் இந்த தொக்கினை செய்யும்போது நீர் சேர்க்காமல் குறைந்த தீயில் செய்வதுதான் ஸ்பெஷல்.

மிக்க நன்றி கீதா!! இப்போதெல்லாம் க‌ருவாடு தொக்கினைதான் அதிகம் செய்கிறேன்.இதே போல் இறாலிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:


வஞ்சிர கருவாடு - 1 துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 பெரியது
சோம்பு -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*கருவாட்டை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சோம்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*தேங்காயை நீர் சேர்க்காமல் நன்கு நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி ப்ரவௌன் கலரில் வரும் போது ஊரவைத்த கருவாட்டினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*நன்கு வெந்து சுருண்டுவரும் போது வெங்காயத்தின் கலர் நன்கு பொன்முறுவலாக வரும் போது அரைத்த தேங்காயினை சேர்த்து மேலும் 3-  4 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

பின் குறிப்பு :


*தேவையெனில் தேங்காய் அரைக்கும்போது 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கலாம்.அதிகம்  நீர் சேர்த்து அரைத்து ஊற்றினால் தொக்கின் சுவை மாறுபடும்.

Related Videos