செட்டிநாடு கோழி ரசம் | Chettinad Kozhi Rasam
இந்த ரசம் சளி மற்றும் காய்ச்சல் வரும் போது குடித்தால் உடனே சரியாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் எலும்பு துண்டு -100 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -6
நறுக்கிய தக்காளி -1 பெரியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1டீஸ்பூன்
ரசப்பொடிக்கு:
மிளகு+சீரகம் - தலா1 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்
சோம்பு -1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -3
பூண்டுப்பல் -3
தாளிக்க:
எண்ணெய் -1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை விளக்கம்:
*குக்கரில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து 4 கப் நீர் வைத்து சிறிது உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.
*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக பொடிக்கவும்.
*குக்கர் ப்ரெஷர் அடங்கியதும் எலும்புதுண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வடிகட்டிய நீரினை சேர்க்கவும்.
*ரசப்பொடி மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
*சூப்பாகவோ குடிக்கலாம்அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு :
*வேகவைத்த எலும்பு துண்டுகளை வறுத்து சாப்பிடலாம்,அல்லது குழம்பில் கடைசியாக சேர்க்கலாம்.