சிக்கன் பாஸ்தா | Chicken Pasta
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 1
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*சிக்கன், வெங்காயம் மற்றும் தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு மற்றும் எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.
*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு மசிக்க வதக்கி சிக்கனை போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.
*சிக்கன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.
*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.
*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.