சிகப்பு முளைகீரை கடையல் | sigappu mulai keerai kadayal
முளைகீரையில் பச்சை,சிகப்பு என 2வகை இருக்கிறது.அதில் சிகப்பு கீரை நன்கு சுவையாக இருக்கும்.முளைகீரையில் பொரியல்,கடையல் என செய்யலாம்.
முளைகீரையில் தக்காளி அல்லது புளி போட்டு கடையலாம்.இதில் தக்காளி மட்டுமே சேர்த்து செய்துருக்கேன்.
தேவையான பொருட்கள்:
முளைகீரை -1 கட்டு
பச்சை மிளகாய் -2
பூண்டுப்பல் -10
தக்காளி -1 பெரியது
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் -2 டீஸ்பூன்
வடகம் -1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
செய்முறை விளக்கம்:
*கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி நீரை வடிகட்டவும்.முற்றிய தண்டாக இருந்தால் தனியாக சாம்பார் செய்யலாம்.இளசாக இருந்தால் கீரையுடனே சேர்த்து கடையலாம்.
*பாத்திரத்தில் கீரை, தக்காளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*வெந்ததும் கீரை கடையும் சட்டியில் ஊற்றி,நீரை வடி கட்டி உப்பு சேர்த்து கடையவும்.
*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,கீரையில் சேர்த்து மீண்டும் நன்கு கடைந்து,கீரை வேக வைத்த நீரை கலந்து பரிமாறவும்.