குதிரைவாலி உப்புமா | Kuthiraivali (Barnyard Millet) Upma

குதிரைவாலி - அனைவரும் மறந்து போன தானியங்களில் இதுவும் ஒன்று.இது ஒரு புன்செய் பயிர். இதில் அதிகளவு நார்ச்சத்து, மாவுசத்து,கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து,இரும்பு சத்து  மற்றும் பாஸ்பரஸ் இருக்கு.

பயன்கள் =  உடல் எடையைக் குறைக்கவும், இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கவும்,ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் வேலை செய்கிறது..

 இதில் உப்புமா எப்படி செய்வதென்று பார்க்கலாம்...இதில் நான் ரைஸ் குக்கர் கப்பின் அளவை பயன்படுத்தியுள்ளேன்

 தேவையான பொருட்கள்:

குதிரை வாலி - 1 கப்

தண்ணீர் -3 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1

உப்பு -1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் -2 டீஸ்பூன்

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*உப்பு மற்றும்  3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் குதிரைவாலியை சேர்த்து கிளறவும்.

*தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அனைத்து விட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.

*15 நிமிடங்கள் கழித்து கிளறினால் சுவையான உப்புமா ரெடி!

பின் குறிப்பு :

*விரும்பினால் இதனுடன் விரும்பிய காய்கள் சேர்த்து செய்யலாம்.

*இதனை அப்படியே சாப்பிடவும்  சுவையாக இருக்கும், சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

*15 நிமிடங்கள் கழித்து கிளறினால் சுவையான உப்புமா ரெடி!!

 

Related Videos