நெய் அப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1/2 கப்

வெல்லம்- 1/2 கப்
ஏலக்காய் -1

வாழைப்பழம் -1 சிறியது
தேங்காய்ப்பல்- 1 டேபிள்ஸ்பூன்

நெய் +எண்ணெய்- தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*பச்சரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்து துணியில் ஈரம் போக உலர்த்தவும்.

*மிக்ஸியில் உலர்த்திய அரிசியுடன் ஏலக்காய் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

*அதனுடன் வெல்லம் சேர்த்து அரைக்கவும்.1 டேபிள்ஸ்பூன் அளவு நீர் சேர்த்து அரைக்கவும்.

*பின் வாழைப்பழம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் அரைத்த மாவினை ஊற்றி தேங்காய்ப்பல் சேர்த்து கலக்கவும்.

*மாவின் பதம் மிக கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்ககூடாது.

 *சிறிய கிண்ணத்தில் எண்ணெய்+நெய் இரண்டையும் கலந்து வைக்கவும்.

 *அப்பக்குழியினை காயவைத்து எண்ணெய் +நெய் இரண்டையும் கலந்து சிறிதாக ஊற்றிய பின் ஒரு குழிக்கரண்டி மாவினை அப்பக் குழியில் ஊற்றவும்.

*ஒருபக்கம் வெந்ததும் மறுப்பக்கம் திருப்பிவிட்டு எண்ணெய்+நெய்கலவையை ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பின் குறிப்பு:

 *வெல்லத்தினை சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டியும் சேர்க்கலாம்.அப்படி சேர்க்கும் போது மாவின் பதம் நீர்க்க இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

 *மாவு மிக கெட்டியாக இருந்தால் அப்பம் கடினமாக இருக்கும்.

 *எண்ணெய்+நெய் இரண்டையும் கலந்து சுட்டால் தான் பொன்னிறமான கலர் கிடைக்கும்.

 * அப்பம் மென்மையாக இருப்பதற்காக வாழைப்பழம் சேர்க்க வேண்டும்.

 *அப்பக்குழி இல்லையெனில் நேரடியாக எண்ணெயில் ஊற்றி பொரித்தெடுக்கலாம்.

Related Videos