மதுரை சிக்கன் ரோஸ்ட் | Madurai Chicken Roast

தேவையான பொருட்கள்:

 சிக்கனில் ஊறவைக்க:‌
சிக்கன் -1/2 கிலோ

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்

உப்பு -3/4 டீஸ்பூன்

பொடிக்க:‌

பிரியாணி இலை -1

பட்டை -சிறுதுண்டு

கிராம்பு- 4

ஏலக்காய் -3

சோம்பு + சீரகம் - தலா 1 டீஸ்பூன்

தொக்கு செய்ய:‌

நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்கயம் - 15

நறுக்கிய பெரிய வெங்காயம்- 1

நறுக்கிய தக்காளி -1

கறிவேப்பிலை -2 கொத்து

இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்

வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள்- 1 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

 *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 *வதங்கியதும் பெரிய வெங்காயம்இஞ்சி பூண்டு விழுது மற்றும்  தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

 *தூள் வகைகள் மற்றும்  உப்பு சேர்த்து வதக்கிய பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை 5 நிமிடங்கள் வதக்கி 3/4 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

 *கறி வெந்து எண்ணெய் பிரியும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

 பின் குறிப்பு :

*இந்த தொக்கின் சுவையே குறைந்த தீயில் சமைப்பதுதான்.

 *நல்லெண்ணெயில் சமைப்பது சுவையை அதிகரிக்கும்.

 *அவரவர் சுவைக்கேற்ப காரத்தினை சேர்க்கவும்.

Related Videos