சிக்கன் புலாவ் | ChickenPulao

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்

சிக்கன் - 1/2 கிலோ

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

புதினா - சிறிதளவு

நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 2

தயிர் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள்  - தலா1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

பிரியாணி இலை -2

கறிவேப்பிலை - சிறிது

 செய்முறை விளக்கம்:

*சிக்கனை சுத்தம் செய்து தயிர்கரம் மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

 *வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.

 *நறுக்கிய பாதி வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 *குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்பச்சை மிளகாய்புதினாமஞ்சள்தூள் மற்றும் ஊறவைத்த சிக்கன்  அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

 *பின் அரிசிஉப்புதேங்காய்ப்பால் மற்றும் 1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

 *வெந்ததும் பொரித்த வெங்காயம்ஏலக்காய்த்தூள் மற்றும் ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Related Videos