ஹைதராபாத் சிக்கன் 65 | Hyderabadi Chicken 65
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
முட்டையின் வெள்ளைக் கரு - 1
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*சிக்கனில் உப்பு, முட்டை வெள்ளைக் கரு, சிகப்பு கலர், மிளகாய்த்தூள், சோளமாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு கிண்ணத்தில் தயிர், மஞ்சள் கலர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலா அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தயிர் கலவையை ஊற்றவும்.இதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி இறக்கவும்.