சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop

தேவையான பொருட்கள்:

 சிக்கன் லெக் பீஸ் - 6

ரெட்கலர் -1 சிட்டிகை

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க

புதினா,கொத்தமல்லி -சிறிது

மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழௌது - 3/4 டேபிள்ஸ்பூன்

தயிர் - 1டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்

சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்

முட்டை வெள்ளைக்கரு -1

செய்முறை விளக்கம்:

 * சிக்கனை சுத்தம் செய்து நடுவில் அங்கங்கே கீறிக்கொள்ளவும்.

*பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், ரெட்கலர், இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும்  சிறிது உப்பு அனைத்தையும் கலந்து வைக்கவும்.

 *குக்கரில் சிக்கனை தண்ணீர் ஊற்றாமல் 3 விசில் வரை வேகவிடவும்.சிக்கனில் தண்ணீர் விடும்,அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

 *ப்ரெஷ்ர் அடங்கியதும் திறந்துப் பார்த்தால் கறி வெந்து தண்ணீர் விட்டிருக்கும்.

 *சிக்கனை மட்டும் தனியா எடுத்து அதில் மைதாமாவு, சோளமாவு, முட்டை வெள்ளைகரு மற்றும்  தேவைப்பட்டால் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

 *பிசையும் போது தண்ணீர் தேவையெனில் சிக்கன் வெந்த தண்ணீர் ஊற்றி பிசையவும்.

 *பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 *சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.

Related Videos