சிக்கன் ப்ரைட் ரைஸ் | Chicken Fried Rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
நீளவாக்கில் அரிந்த குடமிளகாய் - சிறிதளவு
பொடியாக அரிந்த எலும்பில்லாத சிக்கன் - 3/4 கப்
முட்டை - 2
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*முட்டையை அடித்து ஊற்றி பொடிமாஸாக செய்யவும்.

*கடாயில் சிறிது பட்டர் சிக்கன், சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.

*அதே கடாயில் பட்டர் ஊற்றி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதக்கவும்.வெங்காயத்தை லேசாக வதக்கினால் போதும்.

*பின் குடமிளகாய், பட்டாணி, சிக்கன் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.குடமிளகாய் லேசாக வதக்கவும்.

*பின் வடித்த சாதம், உப்பு மற்றும் முட்டை பொடிமாஸ் அனைத்தயும் நன்கு கிளறவும்.

*கடைசியாக சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.

Related Videos